செயலியை பற்றிய விவரங்கள்
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த செயலியின் பயன்கள் கீழே பார்க்கலாம்.
COMPARED TO PC SOFTWARES
கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு Adobe premiere Pro மிகப்பெரிய மென்பொருளாக உள்ளது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. இதை யாராலும் மறுக்க முடியாது. பிரீமியர் புரோவிலுள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது.
HOW TO USE THIS BLACK SCREEN EFFECT
இந்த வீடியோ விளைவைக் கொண்டு உங்கள் வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த விளைவு உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த விளைவை வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும்.
HOW TO USE THIS GREEN SCREEN EFFECT
இந்த விளைவை கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். இந்த விளைவில் பல வகையான வடிவங்கள் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படத்தின் மேல் விளைவு வீடியோவை வைத்துவிட்டு குரோமோ கீ என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும்.
HOW TO USE THIS INTRO TEMPLATE
இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உங்களது இன்ட்ரோ வீடியோ உருவாக்க முடியும். இதில் உங்களது லோகோ மற்றும் டெக்ஸ்ட் மட்டும் சேர்த்து ஒரு இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த டெம்ப்ளேட்டை கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும்.
KINEMASTER PREMIUM FEATURES
MULTIPLE LAYERS
KineMaster அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக add செய்து உங்களால் எடிட் செய்ய முடியும். பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் Kinemaster அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது. இதனால் உங்களது விருப்பமான வீடியோக்களை சரியாக எடிட் செய்துகொள்ள முடியும்.
BLENDING MODE
கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்காக பல செயலிகள் உள்ளது. ஆனால் அவற்றை எதிலுமே இந்த ப்லண்டிங் ஆப்ஷன் கிடையாது. இந்த செயலில் மட்டுமே உள்ளது. இந்த ப்லண்டிங் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும்.
CHROMA KEY
வீடியோவின் பேக்ரவுண்ட் ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் பேக்ரவுண்ட் ஒரே கலராக இருந்தாள் சுலபமாக அளிக்கமுடியும். உதாரணமாக வீடியோவின் பேக்ரவுண்ட் பச்சை நிறத்தில் இருந்தால் ரிமூவ் செய்வதற்கு எளிதாக இருக்கும். வீடியோவில் கலர் எது என்று தெரிந்து கொண்டு ரிமூவ் செய்யும்போது கீ கலர் அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும்.
VOICE RECORDING
வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே வாய்ஸ் ரெக்கார்ட் செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது.
HANDWRITING
இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும்.
VOICE CHANGER
உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை ரோபோட் பேசினால் எப்படி இருக்கும் அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது.
EQ MODES
ஆடியோவில் பல விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாகவும் அந்த ஆடியோவை கேட்டுக்கொண்டே இருக்க செய்ய பல ஆப்ஷன்ஸ் இதற்குள் உள்ளது. உதாரணமாக கூறினால் ராக் கிளாசிக் போக் இதுபோன்ற ஆடியோ பில்டர்ஸ் இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும்.
PREMIUM COLOUR FILTER
வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாறி மாற்றிக்கொள்ள இந்த கலர் பில்டர் ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோ மற்றும் புகைப்படத்தின் கலரை மாற்றுவதன் மூலம் அதன் தோற்றம் அழகாக இருக்கும். இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும்.
EXPORT QUALITY
இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை அவுட்புட் எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் உங்களது வீடியோக்களை பார்க்க தெளிவாக இருக்கும். பார்ப்பவர்களுக்கு வீடியோவில் உள்ள தகவல்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இதில் உங்களுக்குப் பிடித்த பார்மட்டில் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த அளவுக்கு உங்களது வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம்.
SPEED CONTROL
உங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும். இதை நீங்கள் பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே இந்த அம்சத்தின் சிறப்பை நீங்கள் உணர முடியும்.
VIDEO REVERSE MODE
ஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் வீடியோ ரிவர்ஸ் மூடு ஆகும்.
THREE TYPE OF VIDEO RATIO
உங்களது வீடியோக்களை உங்களுக்கு பிடித்த பார்மெட்டில் எடிட் செய்ய இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. உதாரணமாக கூறினால் வாட்ஸ்அப் ஃபுல் ஸ்க்ரீன் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் யூடியூப் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் சைஸில் வீடியோ எடிட் செய்யவும் இதில் ஆப்ஷன்ஸ் உள்ளது. இதை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த வடிவத்தில் உங்களது வீடியோக்களை எடிட் செய்ய முடியும்.
CLIP GRAPHICS
இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களில் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய எபெக்ட்ஸ் கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய எபெக்ட்ஸ் நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும். ஏனெனில் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோ மாறும்போது நீங்கள் ஏற்படுத்திய விளைவு அந்த வீடியோவை அழகாக்கும்.
ROTATE AND MIRRORING OPTION
வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்றிக்கொள்ள இந்த ரோட்டைட் அண்ட் மிரர் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதை உங்கள் பிச்சர் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
COLOUR ADJUSTMENT
உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் வெளிச்சம் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது. அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் காண்ட்ராஸ்ட் லெவல் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. எனவே தெளிவில்லாத மற்றும் மங்கலாக இருக்கும் பிச்சர் மற்றும் வீடியோக்களில் இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் பார்க்க ஓரளவு நன்றாக இருக்கும்.
VOLUME ENVELOPE
இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது. ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். அது இந்த இந்த செயலிலும் உள்ளது. இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும்.
VIGNETTE MODE
இதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் பிச்சர் இன் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும். இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது. நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போது இதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு புரியும்.
EXTRACT AUDIO
இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம் இந்த செயலியில் ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோ விற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும் எடுத்துவிட்டு நமக்குத் தேவையில்லாத வீடியோவை டெலிட் செய்து கொள்ளலாம். நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.
TRIM AND SPLIT OPTION
வீடியோ ஆடியோ மற்றும் புகைப்படங்களை தேவையில்லாத இடத்தை வெட்ட இந்த ட்ரிப் அண்ட் ஸ்பிளிட் ஆப்ஷன் பயன்படுகிறது. இந்த ஆப்ஷன்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. ஏனெனில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலிகள் பல உள்ளது. அவற்றை ஒப்பிடும்போது இந்த செயலியில் நாம் விரும்பும் இடத்தை சரியான இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தை சேர்க்கவும் முடியும்.
PAN AND ZOOM
இந்த ஆப்ஷன் மூலம் உங்களது வீடியோக்களை பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில் காட்ட இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் மிக பின்புறத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட்டை மிக அருகாமையில் அதாவது திரைக்கு முன்பாக மிக அருகே கொண்டுவர இந்த ஆப்ஷன் பயன்படுகிறது.
PREMIUM TEXT
இந்தச் செயலியில் அளவுக்கு அதிகமான அகராதிகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த மொழியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். Kinemaster asset Store ல் உங்களுக்கு தமிழ்மொழி தேவை என்றால் தமிழ் மொழியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் டிபால்ட் ஆக ஆங்கில அகராதிகள் உள்ளது. இதை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
OVERLAY AND STICKERS
வீடியோ மற்றும் புகைப்படங்களை மேலும் அழகாக்க இந்த ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன்ஸ் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோவில் தீப்பொறி பறப்பதுபோல் விளைவை ஏற்படுத்தலாம் மற்றும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுபோல் விளைவும் ஏற்படுத்த முடியும். இதுவே ஓவர்லே அண்ட் ஸ்டிகர்ஸ் ஆப்ஷன் ஆகும்.
SPECIAL EFFECTS
இதிலும் ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷனை போன்று உங்களுக்குப் பிடித்த விளைவுகளை உங்களது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆப்ஷனை வீடியோ மற்றும் புகைப்படங்களில் குறிப்பிட்ட இடத்தில் சரியாக பயன்படுத்த முடியும் தேவையில்லாத இடத்தில் அதை நிறுத்திக் கொள்ளவும் முடியும். இதன் மூலம் உங்களது வீடியோ மற்றவர்கள் வீடியோவிலிருந்து தனித்துவமாக தெரியும்.
ANIMATION AND TRANSITION EFFECTS
எழுத்துக்களில் விளைவுகளை ஏற்படுத்த அனிமேஷன் எபெக்ட்ஸ் பயன்படுகிறது. Transition புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது. இதில் தொடக்கத்தில் ஒரு அனிமேஷன் ஆப்ஷனை பயன்படுத்த முடியும் முடிவில் ஒரு ஆப்ஷனை பயன்படுத்த முடியும். தெளிவாகக் கூறினால் ஒரு எழுத்துக்களின் தொடக்கத்தில் ஒரு விளைவையும் அந்த எழுத்து மறையும் பொழுது ஒரு விளைவையும் கொடுக்க முடியும்.
KINEMASTER TIPS: WHY DO I HAVE IMAGE INSERT OF MEDIA ?
இந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன். Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும். அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது. இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.
Super
Save to websitwvpls pls pls ennaku oru nalilavaipi
Wplsbennnaku ori nalila vaipu pls pla i live tha kine master
Hiii
Super
Semma irrikka
Sema bro 🙋 of
Only sometime it will enter to ad page.
Bro not download in the template
How to download this templite
Superb
Bro Download Pannatha kinemaster support aha matengithu bro
Oh
Super
Bro green screen effect videos link podunga bro YouTube description la,
Thank u bro
Super
Study
Spr broo insta la post panna 1h la 980 live broo vara level ……
Template link kuduthitinga but adha download panni use panna mudila… Ellarukkum idhu periya pblm ah irukku… Eppdi template download paneathunu oru video potta romba usefull ah irukkum… Aasai kasti posam pannathinga G
Nice
Epadi bro download pantrathu
How to download in template
Plz link Share
How to downlode template
Nise
Super
Diff CK on go on FB hi
Hi
Pagal how to download
Bro pls tell me how to download the template bro
Hgjj
Nice bro
Eppati bro download panurathu
Super bro
nice
I liked screen green effect
Layer davunlod pannuradhu appudi
Enakku effect download venum
Super
Verry nice
Verry nice
IND
Nice
Poli
Hlo
Hi
Bro எப்படி download பண்றது plea சொல்லுங்க edit பண்ணனும்
Ji eppadi download pannurathu templates…..hheriyala
Nice
Videos download panna mutiyaathu
How to download this template please tell me
Very nice😊👏
Nalla iruku video Editing
Enaku templete download venum
Background
Green screen
Super bro
Semma
Super
Super
Hi
Super bro
Good
Nice